டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு உற்சாக வரவேற்பு!
05:21 PM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
மதுரை வந்தடைந்த மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து அரிட்டாப்பட்டி கிராம மக்கள் தமிழக பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அ.வல்லாளப்பட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை சென்றார்.
Advertisement
விமான நிலையத்தில் இருந்து அரிட்டாபட்டி சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Advertisement