டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான முடிவு - அண்ணாமலை நம்பிக்கை!
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவிக்காமல், பத்து மாதங்களுக்கு பிறகு திமுக அரசு நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு ஆரம்ப கட்ட நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அண்ணாமலை, கழிவுநீர் கலக்கவில்லை என பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.