செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு - எல்.முருகன் குற்றச்சாட்டு!

03:23 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி திமுக அரசு விளையாட்டு அரசியல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உளவியல் மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகெங்கும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி திமுக அரசு விளையாட்டு அரசியல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். கடந்த காலங்களில் அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு திமுக அரசு  எதிர்ப்பு தெரிவித்தாகவும் அவர் சாடினார்.

Advertisement

Advertisement
Tags :
DMK governmentFEATUREDl murugan press meetl murugan speechMAINMinister of State L. Murugantungsten mining issue.
Advertisement
Next Article