செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திக்கும் அண்ணாமலை, எல்.முருகன்!

11:04 AM Dec 12, 2024 IST | Murugesan M

மதுரை அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்க விவகாரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை, மத்திய  அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.

Advertisement

மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கடிதம் மற்றும் தொலை பேசி மூலம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.

அப்போது, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என வலியுறுத்துவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
annamalaiAritapattiFEATUREDMaduraiMAINMinister Kishan Reddyminister l murugantungsten mine
Advertisement
Next Article