செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த எல்.முருகன், அண்ணாமலை!

01:50 PM Dec 12, 2024 IST | Murugesan M

மதுரை அரிட்டாபட்டியில், டங்ஸ்டன்  விவகாரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை, மத்திய  அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர்.

Advertisement

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதியில்  சமீபத்தில் டங்ஸ்டன் ஏலம் விடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என முன்பு சமர்ப்பிக்கப்பட்ட மனு மீது இன்று மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியுடன் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.,

திமுக அரசு வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புக்கு வழிவகுத்தது. ஏலத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளின் காலவரிசையை எங்களுக்கு விரிவாக விளக்கியதுடன், முன்னுரிமை அடிப்படையில் மக்களின் நலன் கருதி சாதகமான முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி உறுதியளித்தார்.

Advertisement

தமிழக மக்களின் நலன்களை பிரதமர் மோடி எப்போதும் மனதில் வைத்துள்ளார்,  அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் இன்னல்கள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
annamalaicentral minister kishan reddydelhiFEATUREDkishan reddyMAINminister l muruganTungsten issue
Advertisement
Next Article