டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் : எல்.முருகன் பேட்டி!
02:08 PM Jan 27, 2025 IST | Murugesan M
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
Advertisement
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
ஆரம்ப நிலையிலேயே டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு திமுக அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். டங்ஸ்டன் ஏலம் நிறுத்தப்பட்டதற்கும் திமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை எனக்கூறிய எல்.முருகன், மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement