டாக்டர் செரியன் மறைவு - அண்ணாமலை இரங்கல்!
டாக்டர் செரியன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "உலகப் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர், பத்மஶ்ரீ டாக்டர். K.M. செரியன்மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐம்பதாண்டு காலங்களுக்கும் மேலாக, இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் மிக்கவர். இந்தியாவின் முதல் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் முதல் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்த பெருமைக்குரியவர் என்றும் அவ்ர கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகக் கருதப்படுகிறவர். டாக்டர். K.M. செரியன் மறைவு, இந்திய மருத்துவத்துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாலை தெரிவித்துள்ளார்.