டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு
01:40 PM Mar 17, 2025 IST
|
Murugesan M
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திமுக அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம் முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை. டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement