செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் : பாஜக மூத்த தலைவர்கள் கைது!

07:25 PM Mar 17, 2025 IST | Murugesan M

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஜக மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தனர்.

Advertisement

தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்த சூழலில், போராட்டத்தில் பங்கேற்ற இருந்த பாஜக மூத்த தலைவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தொடர்ந்து, காவல் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றபோது பாஜக தொண்டர்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

Advertisement

இதேபோன்று, சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து எழும்பூர் புறப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், அவரை தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை தங்க வைத்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க குவிந்த பாஜக தொண்டர்களை காவல்துறை கைது செய்தனர். மேலும், அவர்களை வாகனங்களை அழைத்துச் சென்றதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement
Tags :
MAINதமிழிசை சௌந்தரராஜன்tn bjp protestபாஜகProtest against TASMAC corruption: Senior BJP leaders arrested!
Advertisement
Next Article