செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் - அண்ணாமலை உறுதி!

07:25 PM Mar 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை இல்லம் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதல்வர் ஸ்டாலின் கோட்டை விட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் திமுக இன்று நாடகம் நடத்துவதாகவும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் உள்ள  தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Advertisement

டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் என்றும், தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழல் இந்தியாவை உலுக்கும் என்றும் அவர் கூறினார். இந்த ஊழலில் கண்டிப்பாக கைது நடவடிக்கை இருக்கும் என்றும், அரசு மதுபான கடை ஊழலில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

Advertisement
Tags :
FEATUREDMAINMK StalinTamil Nadu BJP State President Annamalaiannamalai pressmeetBJP black flag protestTASMAC scandal will turn Tamil Nadu politics
Advertisement