டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அண்ணாமலை கைது!
11:46 AM Mar 17, 2025 IST
|
Murugesan M
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
Advertisement
டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து இன்று தமிழக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முற்றுகை போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டம் நடத்தச் சென்ற தமிழக பா.ஜ.க, மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க,வினரை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
Advertisement
இந்நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட, சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர்.
Advertisement