டாஸ்மாக் மெகா ஊழலை கண்டித்து பாஜகவினர் போராட்டம் : பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி கைது!
05:54 PM Mar 17, 2025 IST
|
Murugesan M
டாஸ்மாக் மெகா ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது.
இதனை கண்டித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக பாஜகவினர் அறிவித்தனர். அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
அதேபோல் பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தியை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அருகிலுள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.
Advertisement