செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டாஸ்மாக் வழக்கு விசாரணை - இரு நீதிபதிகள் விலகல்!

12:30 PM Mar 25, 2025 IST | Ramamoorthy S

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகளும் விலகியுள்ளனர்.

Advertisement

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Advertisement

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு விசாரித்து வந்தனர். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையில் இருந்து விலகுவதாக இரு நீதிபதிகள் அறிவித்தனர்.

அடுத்த அமர்வுக்கு முன்னிலையில் வழக்கு பட்டியலிடும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவு தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதி செந்தில் குமார், எம்பி ஜெகத்ரட்சன் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக ஆஜாராகி இருப்பதால் டாஸ்மாக் வழக்கின் விசாரணையில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
FEATUREDhigh court judges withdrawn from tasmac caseMAINTASMAC CASE
Advertisement
Next Article