டிசம்பரில் ரூ.1, 76, 857 கோடி ஜிஎஸ்டி வசூல் - நிதியமைச்சகம் தகவல்!
10:34 AM Jan 02, 2025 IST
|
Murugesan M
கடந்த டிசம்பரில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 857 கோடி ரூபாய் சரக்கு, சேவை வரி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து பத்தாவது முறையாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.
அதிலும் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் வசூலான ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 882 கோடி ரூபாயை விட, கடந்த மாதத்தில் 7 புள்ளி 3 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலாகியிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
நிகழ் நிதியாண்டில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலானது குறிப்பிடத்தக்கது.
Advertisement