செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு! - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

09:37 AM Nov 27, 2024 IST | Murugesan M

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(1)-ன்படி, வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன்  தலைமையில் நடைபெற உள்ளது.

Advertisement

கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
ADMKAdmk NEWSAIADMK General Assembly on December 15AIADMK General Committee on December 15! - Edappadi Palaniswami announcementepseps pressmeetFEATUREDMAIN
Advertisement
Next Article