செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டிரம்பின் முடிவால் கதறிய செலினா கோம்ஸ் : அழுதபடி பதிவிட்ட வீடியோ!

08:15 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நாட்டவர்கள் வெளியேற்றப்படுவதை குறிப்பிட்டு அழுதபடி பிரபல பாடகியும், நடிகையுமான செலினா கோம்ஸ் வீடியோ வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கியுள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றார். பதவியேற்றது முதல் 'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கையை அடிப்படையாகக்கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோத குடியேற்றங்கள் தடுக்கப்படும் என உறுதியளித்த அவர், அமெரிக்காவினுள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், 4 ஆயிரம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிளவுடியா ஷீன்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மெக்சிகோ வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பாடகியும், நடிகையுமான செலினா கோம்ஸ், அதிபர் டிரம்பின் முடிவால் தனது நாட்டு மக்கள் தாக்கப்படுவது வருத்தமளிப்பதாகக் கூறி, கதறி அழுதபடி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். மெக்சிகோ நாட்டின் கொடியுடன் "என்னை மன்னித்துவிடுங்கள்" என்ற வாக்கியத்தையும் அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

அவரின் இந்த வீடியோ சில நிமிடங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது. இதனால் செலினா கோம்ஸ் தான் பதிவிட்ட வீடியோவை உடனடியாக நீக்கினார். அத்துடன், "வெளிப்படையாக மக்களுக்கு பச்சாதாபம் காட்டுவதுதான் தவறு" என பதிவிட்டார். அதுவும் விமர்சனத்திற்குள்ளாக அந்த பதிவையும் அவர் நீக்க நேரிட்டது.

2019-ம் ஆண்டு "LIVING UNDOCUMENTED" என்ற NETFLIX ஆவணப்படத்தை செலினா கோம்ஸ் தயாரித்திருந்தார். அந்த ஆவணப்படம் குடியேற்றத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக குடியேறிய 8 குடும்பங்கள் குறித்தும் விவரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
FEATUREDMAINusadonald trump 2025Selena Gomez cried because of Trump's decision: The video posted while crying!
Advertisement