செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் "வர்த்தக போர்!

09:05 PM Feb 04, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமெரிக்காவுடனான கட்டண வரி போர், கனடாவின் பொருளாதாரத்தை மந்த நிடிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் "வர்த்தக போர்!லைக்குள் தள்ளும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கான காரண, காரணிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Advertisement

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு 'அமெரிக்கா முதலில்' என்ற தனது கொள்கைக்கு ஏற்ப, சட்டவிரோத குடியேற்றம், இறக்குமதி வரி கட்டண விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அவர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

குறிப்பாக கனடா, மெக்சிகோ மீது 25 சதவீத இறக்குமதி கட்டண வரியும், சீனா மீது 10 சதவீதம் கூடுதலாக இறக்குமதி கட்டண வரியும் விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

Advertisement

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தொடர்ந்து தலைநகர் ஒட்டாவாவில் இது குறித்து பேசிய பிரதமர் ட்ரூடோ, ஆப்கானிஸ்தான் போரில் தொடங்கி, கலிபோர்னியா காட்டு தீ பாதிப்பு வரையிலான அமெரிக்காவின் இருண்ட காலங்களில், அதன் உற்ற நண்பனாக இருந்து கனடா உதவிக்கரம் நீட்டியுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், கடந்த கால நட்புறவை அப்படியே முன்னெடுத்து செல்லாமல், அதிபர் டிரம்ப், கனடா பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து வர்த்தக போரை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டார். அதனால் வேறு வழியின்றி கனடாவும் அமெரிக்க பொருட்கள் மீது, 25 சதவீதம் வரி விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான இந்த வர்த்தக போர், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 2 முதல் 4 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக கனடாவின் எதிர்வினையாற்றும் செயல் ஒரு ஆண்டு தொடர்ந்தால், அது பண வீக்கத்தை அதிகரித்து பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே டிரம்பின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள், தாங்களும் வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும், உலக வர்த்தக கூட்டமைப்பில் வழக்கு தொடர உள்ளதாகவும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
economytrump tariffs canadaDonald TrumpTrumpglobal economytrump canadaCanada's response to Trump: "Trade war" that will destabilize the global economy!canada response to trump's feb. 1 tariffs threatwill donald trump carry through on tariffs threat to canada mexicotrade warglobal trade warstrump threatens to take back panama canalthe nationalthe rise of donald trumpwhat does donald trump want from canada to not place tariffsFEATUREDdonald trump to do listMAINtrump vows to take back panama canal
Advertisement