டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற காவல் ஆய்வாளர்- மாரடைப்பால் உயிரிழப்பு!
02:05 PM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜ், பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார்.
Advertisement
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஆய்வாளர் ராஜ் வழக்கம் போல் தனது பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென நெஞ்சுலி ஏற்படவே, தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவரை மேல் சிகிச்சைக்காக சக காவலர்கள் நெல்லை அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், சிறிது தூரத்தில் அவர் சுயநினைவு இழக்கவே, மீண்டும் தனியார் மருத்துவமனைக்கே அழைத்து வரப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். அவரது உடலுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Advertisement
Advertisement