செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்டா மாவட்டங்களில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு!

04:47 PM Jan 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டெல்டா மாவட்டங்களில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டை பயன்படுத்தி 4 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா - தாளடி பயிற்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அறுவடை இயந்திரங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், அறுவடை இயந்திரங்களின் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதன் வாடகையை பலமடங்கு உயர்த்தி வசூலிப்பதாக குற்றச்சாட்டும் விவசாயிகள், தனியார் அறுவடை இயந்திரங்களின் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Harvesting machine shortage in delta districts!MAINtn agriculture
Advertisement