டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
11:12 AM Jan 12, 2025 IST | Murugesan M
தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
Advertisement
நாளை வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement