செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

04:08 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றவுள்ளார். தொடர்ந்து 2025 - 2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13-ம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், 2-ம் பகுதி மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது விவாதிக்கப்பட்டது.

அனைத்துக் கடசி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜ்ஜு,எல்.முருகன், பிரகல்லாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
Tags :
All party meetingBudget SessionFEATUREDFinance Minister Nirmala SitharamanKiren RijijuMAINParliamentPrahlad JoshiRajnath Singh
Advertisement