டெல்லி ஆர்எஸ்எஸ் அலுவலகம் : வரும் 19-ஆம் தேதி திறப்பு!
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
Advertisement
டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திறப்பு விழா நடைபெறவுள்ளது.

2018 இல் தொடங்கிய கட்டுமானத்தில் பண்டைய மற்றும் நவீன நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரைத்தளம் மற்றும் 12 தளங்களைக் கொண்ட மூன்று கோபுரங்களுக்கு சாதனா, பிரேர்ணா மற்றும் அர்ச்னா என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் பெயர் கேசவ் குஞ்ச் (Keshav Kunj) என்றே தொடரும்.
இந்த கட்டிடத்தில் மிகப்பெரிய சூரிய சக்தி வசதி உள்ளது; இங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் 8,500 புத்தகங்கள் உள்ளன. கட்டிட வளாகத்தில் ஐந்து படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் உள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் பிப்ரவரி 19 அன்று டெல்லியின் ஜண்டேவாலானில் உள்ள புதிய கட்டிடத்தில் இருந்து அதன் பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமைப்பின் டெல்லி பிரிவின் "கர்யகர்த்த சம்மேளனம்" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.