டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு பனி எதிர்ப்பு ரயில்கள் இயக்க முடிவு!
03:47 PM Dec 27, 2024 IST
|
Murugesan M
டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு பனி எதிர்ப்பு வடிவமைப்புடன் கூடிய 5 புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
Advertisement
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 5 புதிய ரயில்களுக்கான தயாரிப்பு பணி முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதத்தில் இருந்து சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ரயில்களும் ஒரே நேரத்தில் இயக்கப்படாது என்றும், சக்கரங்கள் மற்றும் என்ஜினின் முன் கண்ணாடி ஆகியவை பனிப்பொழிவைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 5 ரயில்களிலும் சூடான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article