செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லியில் எம்பிக்கள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

06:09 PM Dec 15, 2024 IST | Murugesan M

காசநோய் குறித்து விழிப்புணர்வு  ஏற்படும் வகையில் டெல்லியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே  கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

Advertisement

அடுத்த ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதையொட்டி காசநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இடையே டெல்லி தயான் சந்த் கிரிக்கெட் மைதானத்தில் நட்பு ரீதியாக கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

போட்டியை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார்.இந்த போட்டியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்  பிரதமர் நரேந்திர மோடியின் 2047 ஆம் ஆண்டிற்குள் 'விக்சித் பாரத்'  இலக்கை அடையும் விதமாக  காசநோய் மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
central minister l murugancricket matchdelhiFEATUREDL MuruganMAINmps cricket match
Advertisement
Next Article