செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீத வாக்குப்பதிவு!

01:04 PM Feb 05, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19 புள்ளி 95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. மறுபுறம் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து விடும் நோக்கில் பாஜக களம் காண்கிறது.

Advertisement

இதனால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் இந்த தேர்தலை ஒட்டி 220 கம்பெனி துணை ராணுவப் படையினர், 19 ஆயிரம் ஊர்காவல் படையினர், 35 ஆயிரம் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 19 புள்ளி 95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement
Tags :
2025 delhi electionDelhi Assembly electiondelhi assembly election 2025delhi assembly election 2025 opinion pollDelhi Assembly Election: 19.95 percent voting as of 11 am!delhi assembly electionsdelhi assembly elections 2025delhi electiondelhi election 2025delhi election 2025 datedelhi election 2025 opinion polldelhi election datedelhi election date 2025delhi election livedelhi election newsdelhi electionsdelhi elections 2025delhi vidhan sabha election 2025delhi vidhansabha election 2025MAIN
Advertisement