செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - 60.42 % வாக்குகள் பதிவு!

06:49 AM Feb 06, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 60 புள்ளி 42 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. ஆம் ஆத்மியும், காங்கிரசும் 70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் களம் கண்டது.

மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சியும் போட்டியிட்டன. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 96 பெண்கள் உள்பட மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 6 மணி நிலவரப்படி 60 புள்ளி 42 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் முடிவு வரும் 8-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

Advertisement

முன்னதாக சீலாம்பூர் தொகுதியில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக கூறி பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது. இதைத் தவிர்த்து பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

Advertisement
Tags :
Delhi Assembly electiondelhi assembly election 2025delhi assembly electionsdelhi assembly elections 2025delhi electio voting percentagedelhi election 2025delhi election 2025 livedelhi election newsdelhi electionsdelhi elections 2025FEATUREDMAIN
Advertisement