டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது பாஜக - கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி - LIVE UPDATES..!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
Advertisement
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக 48, இடங்களிலும், ஆம் ஆத்மி 22 தொகுதியிலும், முன்னிலை வகித்து வருகிறது.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புது தில்லி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா டெல்லியில் அமையவிருக்கும் அரசாங்கம் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை கொண்டு வரும் என தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் டெல்லி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சுமார் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சித் தொண்டர்கள் சிறப்பாகப் பணியாற்றியதாக தெரிவித்தார். வெற்றி பெற்ற வேட்பாளரை வாழ்த்துவதாகவும், அவர் தொகுதிக்காக உழைப்பார் என்று நம்புவதாகசவும் கூறினார்.
கல்காஜி தொகுதியில் பாஜகவின் ரமேஷ் பிதுரியை விட டெல்லி முதல்வர் அதிஷி 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.