டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டு சிறை - டிரம்ப் எச்சரிக்கை!
02:15 PM Mar 22, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்த டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Advertisement
இந்த நிலையில், டெஸ்லா கார்களை நாசவேலை செய்யும் போது பிடிபடும் நபர்கள் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
Advertisement