டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதல் - சாலையில் வழிந்தோடிய பால்!
08:58 AM Mar 22, 2025 IST
|
Ramamoorthy S
ஒசூர் அருகே சாலையோரம் நின்ற பால் டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் வழிந்தோடியது.
Advertisement
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கேரளா நோக்கி பால் டேங்கர் லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓட்டையனூர் அருகே லாரியின் டயர் வெடித்தால், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் கோழி தீவனம் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று பால் டேங்கர் லாரி மீது மோதியது. இதில், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் சாலையில் வழிந்தோடியது.
Advertisement
Advertisement