38-வது தேசிய விளையாட்டுப் போட்டி - டேராடூனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
06:21 AM Jan 29, 2025 IST
|
Sivasubramanian P
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Advertisement
38-வது தேசிய விளையாட்டு போட்டிகள் டேராடூனில் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 7 நகரங்களில் 18 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 38 அணிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
Advertisement
முன்னதாக மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதனை பிரதமர் மோடி, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
Advertisement