செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தஞ்சையில் ஆசிரியை கொலை - தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக அண்ணாமலை கண்டனம்!

03:40 PM Nov 20, 2024 IST | Murugesan M

தஞ்சையில் ஆசிரியை கொலை மற்றும் ஒசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.  இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும்  சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது.

தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்காக முதலமைச்சர் ஸ்டாலின்
வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

 

Advertisement
Tags :
annamalaidmk govtFEATUREDMAINMK StalinTAMILNADU LAW AND ORDERteacher murdered in tanjore
Advertisement
Next Article