செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தஞ்சை அரசுக்கல்லூரியில் பொங்கல் விழா - ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மாணவிகள்!

10:20 AM Jan 10, 2025 IST | Murugesan M

தஞ்சாவூரில் அரசு கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் மும்மதத்தை சார்ந்த பிரமுகர்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து மாணவிகளிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், மண்பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என மாணவிகள் குலவை சத்தம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து கிராமிய பாடலுக்கு கும்மியாட்டம் ஆடியும், திரை இசை பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடியும் மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் ஜல்லிகட்டு காளை கொண்டு வரப்பட்டு மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDGovernment college studentsKundavai Nachiyar Government CollegeMAINPongal festivalTamil Naduthanjurtraditional manner
Advertisement
Next Article