செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தஞ்சை பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் விற்பனை!

12:42 PM Mar 30, 2025 IST | Ramamoorthy S

தஞ்சையில், பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரிடம், ஊழியர் அலட்சியமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

பிபி கார்டன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பல்வேறு வகையான குளிர்பானங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. கடந்த 27-ம் தேதி பெட்ரோல் பங்க்கிற்குச் சென்ற இளைஞர் ஒருவர், தனது குழந்தைக்கு மில்க் ஷேக் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மில்க் ஷேக்-கின் அட்டையை பரிசோதித்தப்போது அது காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கிற்குச் சென்று கேட்டபோது, ஊழியர் ஒருவர் அலட்சியமாக பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

Advertisement
Tags :
expired soft drinksexpired soft drinks salesMAINpetrol stationThanjavur
Advertisement
Next Article