தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்!
12:33 PM Nov 19, 2024 IST | Murugesan M
கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விபூதி, மஞ்சள், திரவியப் பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர் சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
Advertisement
அதனை தொடர்ந்து பெருவுடையார் சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் ஆயிரத்து எட்டு சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் நிரப்பி பூஜை செய்யப்பட்ட 1008 சங்குகள் பெருவுடையார் சன்னதிக்கு எடுத்து செல்லப்பட்டன. அந்த சங்குகளில் இருந்த புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement