தஞ்சை பெரிய கோயில் பௌர்ணமி கிரிவலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தஞ்சை பெரிய கோயில் பௌர்ணமி கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிரிவலப் பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்பு பயன்பாடு இல்லாமல் புதற் மண்டிய நிலையில் மீண்டும் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் கும்பாபிஷேக பணி நடைபெற்றதால் கிரிவலம் நிறுத்தப்பட்டது. க்தர்கள் கோரிக்கை ஏற்று 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் பௌர்ணமி தினத்தில் கிரிவல பாதை மீண்டும் தொடங்கப்பட்டு திருக்கைலாய வீதி வலம் தொடங்கியது.
பக்தர்கள் வரவேற்பு அதிகளவு இருந்ததன் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் திருவையாறு பஞ்சநதீஸ்வரர் ஆலய யானை முன்பு செல்ல சிவ வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்களுடன் ஆயிரக்கணக்கானோர் வீதி உலாவில் பங்கேற்றனர்.
நேற்று மாலை ஆறு மணி முதல் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் மின்விளக்கு குடிநீர் அன்னதானம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.