செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தடம் புரண்ட விழுப்புரம் பயணிகள் ரயில்!

11:45 AM Jan 14, 2025 IST | Murugesan M

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயில் விழுப்புரத்தில் தடம் புரண்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisement

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை புதுச்சேரி நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது.  புறப்பட்ட  சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த 6 பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

இதனால் பயங்கர சத்தம் எழுந்ததால் பயணிகளிடையே அச்சம் ஏற்ப்பட்டது.  உடனடியாக ஒட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனைத்தொடர்ந்து ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

Advertisement

இதனையடுத்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே ஊழியர்களும், பொறியாளர்களும் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் ரயிலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது தொழில்நுட்ப கோளாறு காரணமா அல்லது நாச வேலை ஏதேனும் காரணமா என்பது குறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement
Tags :
MAINpassenger train derailedTrain derailedvillupuramVillupuram passenger train derailed
Advertisement
Next Article