செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி சர்தார் வல்லபாய் படேல் - அண்ணாமலை புகழாரம்!

01:05 PM Dec 15, 2024 IST | Murugesan M

சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி சர்தார் வல்லபாய் படேல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், பாரத ரத்னா, சர்தார் வல்லபாய் படேல்  நினைவு தினம் இன்று. சுதந்திரப் போராட்டத்தில், தலைசிறந்த வழக்கறிஞராக ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களையும், அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்து, சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி. நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான, அமரர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் புகழை போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINsardar vallabhbhai patelsardar vallabhbhai patel memorial dayTamil Nadu BJP State President Annamalai
Advertisement
Next Article