தனியார் சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் சிறுமி மூழ்கி பலி!
07:23 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
திண்டிவனம் அருகே தனியார் சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் சிறுமி மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுஷாந்த் தோபால் என்பவர், தனது குடும்பத்துடன் மஞ்சக்குப்பம் ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.
அங்கு தனது மகள் தேவிபர்னிக்காவின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தேவிபர்னிக்கா, ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement