செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை : வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்!

01:28 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருப்பூரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விடுதிகளின் உரிமையாளர்கள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

Advertisement

திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போதைப் பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விடுதியில் தங்குவோரின் எண்ணிக்கை குறைவதால் 70 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

மேலும் தொழில் பாதிக்காத வகையில் சோதனை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி துணை மேயரும், விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவருமான பாலசுப்பிரமணியம் தலைமையில் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

Advertisement
Tags :
MAINPolice conduct intensive searches at private hostels: Complaints of loss of revenue!தனியார் தங்கும் விடுதி
Advertisement