தனியார் நிறுவன பொது மேலாளர் தற்கொலை!
திருவெறும்பூர் பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கோர் பணியாற்றி வருகின்றனர்.
பெல் நிறுவனத்தின் எஸ்எஸ்டிபி பிரிவில் பொது மேலாளராக சண்முகம் என்பவர் பணியாற்றி வரும் நிலையில், காலைபணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
செல்போனில் தொடர்பு கொண்டபோதும் சண்முகம் எடுக்காததால், அவரது குடும்பத்தினர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். இதனை தொடர்ந்து அலுவலக ஊழியர்கள் சென்று பார்த்தபோது சண்முகம் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து கதவை உடைத்து சென்று பார்த்தபோது சண்முகம் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.