செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!

07:30 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சிறுவயது முதல் தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் என தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு தபால் துறை சார்பில் மாநில அளவிலான 14-வது தபால் தலை கண்காட்சி சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்வேறு தலைப்புகளில் சேகரிக்கப்பட்ட தபால் தலைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 1-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய துவக்க நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.

Advertisement

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறுவயது முதல் தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும், தமிழரின் கலாச்சாரங்களை தபால் துறை பதிவு செய்து வருவதை பெருமையாக எண்ணுவதாக கூறிய அவர், இலக்கியம், கலை, பண்பாடு, பண்டிகை என அனைத்திலும் உள்ள நமது கலாச்சாரத்தை, தபால் துறை தபால்தலை கண்காட்சி மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

Advertisement
Tags :
History can be learned by collecting postage stamps: Chief Secretary Muruganandam!MAIN
Advertisement