செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

11:54 AM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சிதம்பரம் அருகே திருடி நகைகளைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது தப்பியோடிய குற்றவாளியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர்.

Advertisement

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வல்லம் படுகை கிராமத்தில் 10 சவரன் நகை திருடிய வழக்கில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.

திருடிய பொருட்களை சித்தாலப்பாடி அருகே உள்ள முட்புதரில் பதுக்கி வைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு ஸ்டீபனை அழைத்துச் சென்றபோது காவல்துறையைக் கத்தியால் தாக்கிவிட்டு அவர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

Advertisement

எனவே, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி ஸ்டீபனை கைது செய்தனர். காலில் காயமடைந்த ஸ்டீபன் மற்றும் கத்திக் குத்தில் காயமடைந்த காவலர் ஞானப்பிரகாசம் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINPolice shoot and capture a fugitive criminal!குற்றவாளிசிதம்பரம்
Advertisement