தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருகிறது : அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வறிக்கையை, A.S.E.R என்ற அமைப்பு வெளியிட்டது. அதில் கிராமப்புரங்களில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 35 சதவீதம் பேர் 2ம் வகுப்பு பாடப் புத்தகத்தை கூட படிக்க திணறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை விட உத்தராகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் சுமார் 29 ஆயிரம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டில் 72 புள்ளி 9 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை விகிதம் 2024ம் ஆண்டில் 66 புள்ளி 8 சதவீதமாக சரிந்துள்ளது.
தமிழக மாணவர்கள் செல்போன்களை கல்வி கற்க பயன்படுத்தும் விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.