தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காக்க திமுக தவறிவிட்டது - எடப்பாடி பழனிசாமி
தஞ்சையில் பள்ளி ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு திமுக அரசு சட்டம் ஒழுங்கை காக்கத் தவறி விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பணிபுரியும் இடங்களில் துளியும் பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ள நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெறும் விளம்பரங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்தாமல் இனி வரும் காலத்தில் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.