தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்!
நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ஊஞ்சல் உற்சம் மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
Advertisement
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வைகுந்தவல்லி தாயார் வண்ண பட்டாடைகள் உடுத்தியும், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வைகுண்ட பெருமாள் பாண்டியன், கொண்டை சூடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வீணை இசைத்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தசரா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன், மேலூர் பத்திரகாளியம்மன் உச்சி மாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.