தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி புகழாரம்!
தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக மாறி வருவதாக மத் திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Advertisement
மதுரை மாவட்டம், அ.வள்ளாலப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது மத்திய அமைச்சர் கிஷன் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி என கூறினார். ஜல்லிக்கட்டு நடைபெற சிறப்பு கவனம் செலுத்தியவர் பிரதமர் எனவும் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவரகளை விடுவிக்க இலங்கை நாட்டுடன் பேசி விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தேசியக் கொள்கைகளை தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் எனும் நம்பிக்கை இருப்பதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்தார். தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக மாறி வருவதாகவும் அவர் கூறினார்..
இதனைத்தொடர்ந்து மத்திய அரசு டங்ஸ்டன் திட்டம் ரத்து என அறிவித்த உத்தரவை கல்வெட்டாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தனர்.