செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்திற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளது - தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்!

01:45 PM Nov 18, 2024 IST | Murugesan M

தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினத்தையொட்டி
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரத்தின் திருவுருவப்படத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை  செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

Advertisement

வ.உ.சி அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
இந்திய பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று போராடியவர்.
அவர் பெயரில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 170 கோடி ரூபாயில் மேம்பாட்டு திட்டங்களை பாரத பிரதமர் அறிவித்திருக்கிறார்.

தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது.  தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நம் மாநிலத்திற்கு நிதி அதிக அளவில் வரவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அவர் கூறினார்.

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிவது தவறு என்ற ஒரு சட்டம் தெலுங்கானாவில் உள்ளது அதேபோல் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என  அவர்  தெரிவித்தார்.

திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அவர் கேட்டதை செய்வோம் என முதலமைச்சர் கூறுகிறாரே தவிர மக்கள் மனதில் என்ன இருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர் செய்யவதில்லை என அவர் கூறினார்.

நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரை ஒரு தீவிரவாதி போல் நடவடிக்கை எடுப்பது தவறு எனவும்
நடிகை கஸ்தூரி விஷயத்தில் தமிழக அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும் கூறினார்.

தமிழக வளர்ச்சியில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது. அதனால்தான் இன்று 16 வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளது. நிதிக்குழுவிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதல்வர் முன் வைத்துள்ளார்.இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இதே கோரிக்கையை கடந்த நாட்களுக்கு முன்பாக நிதிக்குழுவை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கோரிக்கையை வைத்திருக்க வேண்டும் ஆனால் அதை அவர் நிராகரித்தார். நிதி ஆயோக் போன்ற கூட்டங்களை புறக்கணிக்காமல் தமிழ்நாடு அரசு அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறேன்.

திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதாக கூரிய முதல்வர், திருமாவளவன் கூட்டத்தைக் கூட்டி அந்த கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏன் முதல்வர் இன்னும் நிறைவேற்றவில்லை? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

Advertisement
Tags :
FEATUREDMAINcentral governmentTamilisai Soundararajanallocation of funds for Tamil Nadu.
Advertisement
Next Article