தமிழகத்திலும் காசி தமிழ்ச் சங்கமம் போல் நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் : எல்.முருகன் உறுதி!
தமிழகத்திலும் காசி தமிழ்ச் சங்கமம் போல் நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார்.
Advertisement
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்,
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அடிப்படையில் மூன்றாவது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை கங்கை கரையில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்
தமிழகத்துக்கும் காசிக்கும் உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு "அகத்திய முனிவர்" என்ற கருப்பொருள் மையமாக வைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார்.
காசி என்பது தமிழகத்தின் காஞ்சி, இராமேஸ்வரம், தென்காசி, மதுரை என தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களோடு ஒரு தொடர்புடைய நகரமாகும். குறிப்பாக தென்னகத்தில் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என ஏங்குவது போல வட இந்தியாவில் உள்ளவர்கள் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என நினைப்பர்.