தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisement
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 54 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில், இது நிகழ்வாண்டில் ஆயிரத்து 640-ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில், குழந்தை திருமணம் பற்றி தகவல் கிடைத்த பின்னர் அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, 2022 நிலவரப்படி, குழந்தை திருமணம் பற்றிய புகார்களில், 70 புள்ளி 2 சதவீத திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், இந்த விகிதம் 2023-ல், 65 புள்ளி 4 சதவீதமாகவும், 2024-ல் 53 புள்ளி 7 சதவீதமாகவும் சரிவை கண்டுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு, நெல்லை மாவட்டங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன.
ஈரோட்டில் இந்த ஆண்டு மட்டும் 150 குழந்தை திருமணங்களும், நெல்லையில் 133 குழந்தை திருமணங்களும் அரங்கேறி இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.