தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
09:31 AM Dec 09, 2024 IST
|
Murugesan M
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
வரும் 11, 12, 13 ஆகிய 3 நாட்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
Advertisement
Next Article